வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (16:11 IST)

மேனி பளபளப்புக்கு தண்ணி குடிங்க - தாப்ஸி

என்னுடைய மேனி பளபளப்புக்கு நான் தண்ணியைதான் நம்பியிருக்கிறேன். அனைவரும் தாராளமாக தண்ணி குடியுங்கள் என்று கூறினார் தாப்ஸி.
 

 
தாப்ஸி நடித்துள்ள காஞ்சனா 2 ஏப்ரல் 16 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டிளித்த தாப்ஸி, என்னுடைய மேனி பளபளப்புக்கு அதிகம் மெனக்கெடுவதில்லை. அதிகமாக தண்ணீர் குடிப்பேன், எண்ணெய் உணவுகளை தவிர்த்துவிடுவேன் என்றார்.
 
தாப்ஸி சிகப்பழகு க்ரீம் விளம்பரத்தில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றி கேட்டதற்கு, நான் விளம்பரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் சிகப்பழகு க்ரீம் முகத்துக்கு பொலிவு தருகிறது. ஆனால், நான் எந்த க்ரீமையும் பயன்படுத்துவதில்லை என்றார்.