வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 28 மே 2015 (09:17 IST)

ஐந்தே தினங்களில் 55 கோடிகளை கடந்த தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்

பிக்குவைத் தொடர்ந்து இன்னொரு ஃபீல்குட் படமான தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளுகிறது.


 

ஆனந்த் எல்.ராயின் இப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் நாள் வெள்ளிக்கிழமை இந்தியாவில் இப்படம் 8.85 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது நாளில் 13.20 கோடிகள். ஞாயிறு 16.90 கோடிகள்.

திங்கள்கிழமை முதல்நாள் வசூலைவிட அதிகம், 8.90 கோடிகள். செவ்வாய் 8.20 கோடிகள். மொத்தம் 55.25 கோடிகள். வெளிநாடு வசூலையும் சேர்த்தால் ஐந்து தினங்களில் வசூல் 72.41 கோடிகள். இப்படியே போனால் பிக்குவைவிட குறைந்த தினங்களில் படம் 100 கோடியை எட்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.