வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: திங்கள், 26 ஜனவரி 2015 (11:56 IST)

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல், எஸ்.தாணு வெற்றி

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்தல் அதிகாரியாகவும், பார்வையாளராகவும் இருந்து தேர்தலை நடத்தினார். 
 
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு மன்சூர் அலிகான், கமீலா நாசர், தாணு ஆகியோர் போட்டியிட்டனர். அவர்களில் அதிக வாக்குகள் வாங்கி தாணு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
வெற்றி பெற்ற பிற  நிர்வாகிகள் விவரம் இன்று வெளியாகும்.