1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 2 மே 2015 (09:40 IST)

பிஸியாக இருக்கேன் - கிருஷ்ணாவின் 72 மணிநேர பில்டப்

நடிகர் கிருஷ்ணாவை தெரியுமா? கழுகு படத்தில் நடித்தவர்? யாமிருக்க பயமே படத்தில் கூட ஹீரோவாக நடித்திருந்தார்?
 
இப்படி சில க்ளூக்களை சொன்னால் மட்டுமே ரசிகர்களால் அடையாளம் கண்டுகொள்ளும் நிலையில் இருக்கிறார் கிருஷ்ணா. அவர் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து இதுவரை பிஸி என்ற வார்த்தையை உபயோகிக் அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. ஆனால், இப்போது?
 
யட்சன், விழித்திரு, கிரகணம் என மூன்று படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இதில் விழித்திரு தொடங்கி ஏறக்குறைய இரண்டு வருடங்களாகிறது. அதன் இறுதிகட்ட படப்பிடிப்பை இப்போதுதான் நடத்தினார்கள்.
 
அதன் காரணமாக இந்த மாதத்தில் மூன்று தினங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டி வந்தது கிருஷ்ணாவுக்கு. இப்படியொரு பிஸியை அவர் வாழ்நாளில் அனுபவப்பட்டதில்லை என்றோமல்லவா. 72 மணிநேரம் தொடர்ச்சியா நடித்தேன் என்று பேட்டி தந்து குதூகலித்து வருகிறார். அவரைப் பொறுத்தவரை அது கின்னஸ் சாதனை.
 
ஒரே நேரத்தில் ஆறு படங்களில் நடித்த விஜய் சேதுபதியும், நடிக்கும் பாபி சிம்ஹாவும் இது பற்றி என்ன நினைப்பார்கள்?