வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Muthukumar
Last Updated : சனி, 19 ஏப்ரல் 2014 (19:07 IST)

பிகினியில் தமன்னா...?

சமீபத்தில்கூட பேட்டியொன்றில் தமன்னா இப்படி கூறினார் - "பிகினி, லிப் லாக் இரண்டுக்கும் மறுப்பு தெரிவித்ததால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தேன்."

 
அதாவது பிகினியிலும், முத்தக் காட்சியிலும் நடிக்க தமன்னாவுக்கு விருப்பமில்லை. இதுவரை இந்த இரு விஷயங்களுக்கும் அவர் ஒத்துக் கொண்டதில்லை. ஆனால் முதல்முறையாக அவர் இந்திப் படத்தில் பிகினியில் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமன்னா நடித்த ஹிம்மத்வாலா படத்தை இயக்கிய சஜித்கான் தற்போது கம்ஷகல்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதிலும் தமன்னாவுக்கு முக்கிய வேடம். அவர் தவிர சைஃப் அலிகான், பிபாசா பாசு, இஷா குப்தா, ரிதேஷ் தேஷ்முக் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் பிபாசா பாசுவின் கவர்ச்சியை சமாளிக்க தமன்னாவும் பிகினியில் நடிக்க ஒப்புக் கொண்டதாக மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிகினி, லிப் லாக் இரண்டையும் விலக்கி வைத்திருப்பதாகச் சொன்ன தமன்னா தனது உறுதியிலிருந்து விலகிவிட்டாரா?
 
தமன்னாதான் பதில் சொல்ல வேண்டும்.