வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (16:40 IST)

டேக்கன் மாதிரி தெறிக்கும் சீக்வெல்

டேக்கன் மாதிரி தெறிக்கும் சீக்வெல்

அட்லி இயக்கத்தில் தயாராகியிருக்கும் தெறி இன்னும் திரைக்கு வரவில்லை. அதற்கு முன், தெறியின் சீக்வெல் எடுக்கப்படலாம் என்கிறது தெறி யூனிட்.


 
 
தெறியின் கிளைமாக்ஸ் காட்சி லடாக்கில் எடுக்கப்பட்டது. இந்த கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்ட பிறகே இப்படியொரு முடிவுக்கு தெறி யூனிட் சீக்வெல் முடிவுக்கு வந்துள்ளது.
 
தெறியில் விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் நடித்துள்ளார். சினிமாவில் துருப்பிடிக்காத சென்டிமெண்ட்களில் அப்பா - மகள் பாசமும் ஒன்று. 
 
இதனை வைத்து தெறி சீக்வலை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
அப்பா மகள் சென்டிமெண்ட் ஹாலிவுட்டிலேயே எடுபடுகிறது. தமிழகத்தில் தலையில் வைத்து கொண்டாடுவார்கள்.