வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (11:36 IST)

காதலில் தடுக்கி விழந்த தாப்ஸி

நடிகை தாப்ஸியையும் காதல் தனது கடைக்கண் பார்வையால் ஆசிர்வதித்துள்ளது. டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் விளையாட்டு வீரரை தாப்ஸி காதலிக்கிறார்.
ஆடுகளம் படத்தின் மூலம் திரைக்கு வந்த தாப்ஸி அதற்கு முன்பே விளம்பர உலகில் பிரபலம். குறிப்பாக மிக்சி விளம்பரம். தமிழில் அறிமுகமான அவரை அரவணைத்தது ஆந்திர படவுலகம். தாப்ஸி இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என்றாலும் அவரை பலரும் காதலித்தனர். மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜும், நடிகர் மகத்தும் தாப்ஸிக்காக கட்டிப் புரண்டு சண்டையிட்டு விழுப்புண்கள் ஏற்படுத்திக் கொண்டது வரலாறு. அதில் மகத்துக்கு விழுப்புண்கள் அதிகம்.
இந்தியில் நடிக்க ஆர்வம் காட்டும் தாப்ஸி இப்போது அடிக்கடி பேட்மின்டன் போட்டி நடக்கும் இடங்களில் ஆஜராகிறார். காரணம் டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மின்டன் வீரர். தாப்ஸியும் குறிப்பிட்ட விளையாட்டு வீரரும் காதலிக்கிறார்கள். தனது ட்விட்டர் பக்கத்தில் டென்மார்க் காதலர் தாப்ஸியை மை லவ் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.
 
இவர்களின் காதல் மைதானம் தோறும் செழித்து வளர்கிறது. விரைவில் திருமணம் செய்ய நமது வாழ்த்துகள்.