வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 25 மார்ச் 2015 (09:44 IST)

டண்டணக்கா பாடல் - தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகருக்கு டி.ஆர்.நோட்டீஸ்

ரோமியோ ஜுலியட் படத்தில் இடம்பெற்றுள்ள டண்டணக்கா பாடல் டி.ராஜேந்தரை கேலி செய்கிறது என்று சர்ச்சை எழுந்ததும், அவரை அந்தப் பாடலில் மரியாதை செய்திருக்கிறோம் என்று படக்குழு பதிலளித்ததும் தெரிந்ததே.
 
குறிப்பிட்ட பாடலுக்கு தடைகேட்டு வழக்கு தொடர டி.ஆர். முடிவு செய்துள்ளார். முதல்கட்டமாக அவர் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குனர் லக்ஷ்மண், இசையமைப்பாளர் டி.இமான், பாடிய அனிருத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
பாடலை படத்திலிருந்து நீக்காவிடில் தடைகேட்டு அவர் கோர்ட்டை அணுகப் போவதாக செய்திகள் கூறுகின்றன.