வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 29 அக்டோபர் 2014 (11:12 IST)

நல்ல மாப்பிள்ளைக்காக காத்திருக்கும் ஸ்வாதி

சுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை தேடி வருகின்றனர். மாப்பிள்ளை அமைந்தால் உடனே திருமணம் செய்ய ஸ்வாதியும் தயாராக உள்ளார்.
 
தமிழ், மலையாளத்தில் நடித்து வந்த ஸ்வாதிக்கு சமீபமாக வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. வயதும் 27 ஆகிறது. அதனால் திருமணம் செய்யும்படி பெற்றோர் வற்புறுத்த ஸ்வாதியும் அதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். இதுதான் சரியான நேரம், அதனால்தான் மாப்பிள்ளைப் பார்க்க சம்மதித்தேன் என்று ஸ்வாதி கூறியுள்ளார்.
 
சமீபத்தில்தான் ஸ்வாதி திருமண சர்ச்சையில் சிக்கினார். அப்போது அதனை மறுத்து கவிதையெல்லாம் எழுதியவர் சில வாரங்களிலேயே மாப்பிள்ளை தேடும் விவகாரத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார்.
 
ம்.. 27 என்பது அலைபாயுற வயசுதான்.