Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி, கமல் படத்தலைப்பை வாங்கிய சுசீந்திரன்?


cauveri manickam| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (14:27 IST)
ரஜினியும், கமலும் இணைந்து நடித்த ஒரு படத்தின் தலைப்பை, சுசீந்திரன் தனது படத்துக்கு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 

 

‘மாவீரன் கிட்டு’ படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கிவரும் படம் ‘அறம் செய்து பழகு’. சுந்தீப் கிஷண், விக்ராந்த், மெக்ரீன் பிர்ஸடா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கவுள்ள அடுத்த படத்துக்கு, ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ தலைப்பை வைக்கப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது. 1978ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, ஸ்ரீதர் இயக்கியிருந்தார். ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா இருவரும் ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :