1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 27 மே 2015 (12:38 IST)

முதலில் மாஸ் பிறகு மாஸு இப்போ மாசு ... என்ன கொடுமை இது நாராயணா?

ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிச்சலுகை கிடைக்காது என்பது தெரிந்திருந்தும், வம்படியாக ஆங்கிலப் பெயர்களைதான் சிலர் படங்களுக்கு வைக்கிறார்கள். கடைசி நேரத்தில் பெயரை மாற்றினாலும் முதலில் வைத்த ஆங்கிலப் பெயர்தான் ரசிகர்கள் மனதில் நிற்கும் என்று அவர்களுக்கு நினைப்பு. தவிர, யாரையும் ஏமாற்றிவிடலாம் என்ற அகந்தை.
வெங்கட்பிரபு தனது படத்துக்கு மாஸ் என்று பெயர் வைத்தார். ஆங்கில மாஸ்தான். வரிச்சலுகைக்காக பிறகு, மாஸ் என்கிற மாசிலாமணி ஆக்கினார்கள். மாசிலாமணியை யார் மாஸ் என்று அழைப்பார்கள்? பிரச்சனை கிளம்ப, மாஸு என்கிற மாசிலாமணியாக பெயர் மாறியது. தப்பு தப்பு இதுவும் தப்பு என்று குட்ட, மாசு என்கிற மாசிலாமணியாக மாற்றியிருக்கிறார்கள். மாசு என்றால் அழுக்கு என்று பொருள்.
 
ஆங்கிலத்துக்கு ஆசைப்பட்டு இப்படி அழுக்காக வெளியாக வேண்டுமா என்ன. மேலும், மாசுடன் இந்த மாற்றம் நிற்குமா இல்லை தூசு வரைக்கும் செல்வார்களா என்பதும் தெரியவில்லை.