1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 17 நவம்பர் 2014 (11:07 IST)

சூர்யாவின் மாஸ் - ஒரே கல்லில் ஆந்திரா மாங்காயையும் வீழ்த்த வெங்கட்பிரபு திட்டம்?

வெங்கட்பிரபு சூர்யா இரு வேடங்களில் நடிக்கும் மாஸ் ஹாரர் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா, எமி ஜாக்சன் என இரு நாயகிகள். வழக்கம்போல் பிரேம்ஜி அமரன் இருக்கிறார். உடன் ஸ்ரீமன், ஜெயராம்.
 
வெங்கட்பிரபு சமீபத்தில் தனது பிறந்தநாளை மாஸ் படப்பிடிப்பில் கொண்டாடினார். அதில் தெலுங்கு நடிகர்கள் ரவிதேஜா, ராணா இருவரும் கலந்து கொண்டனர். நேற்று வெளியான ஒரு புகைப்படத்தில் வெங்கட்பிரபு, சூர்யாவுடன் ராணாவும், பிரபாஸும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
சூர்யா படங்களுக்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு உள்ளது. தெலுங்கு உரிமையையும் சேர்த்துதான் சம்பளமாக அவர் பெற்று வருகிறார். மாஸில் தெலுங்கு நடிகர்களை ஒரு காட்சியிலாவது தலைகாட்ட வைத்தால் படத்தின் தெலுங்கு டப்பிங்கின் மார்க்கெட் கண்டபடி உயரும். ஒரே கல்லில் ஆந்திரா மாங்காயையும் வீழ்த்தத்தான் சூர்யாவும், வெங்கட்பிரபுவும் வியூகம் வகுக்கிறார்கள் என கூறப்படுகிறது.
 
உண்மையா பாஸ்...?