வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (12:00 IST)

ரஜினியைப் பார்த்து வாயைப் பிளந்த நடிகை

ரஜினியை நேரில் பார்த்த ஆச்சரியத்தில் வாயைத் திறந்தபடியே ரசித்தாராம் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டில், சாக்‌ஷி அகர்வால் என இதுவரைக்கும் மூன்று நடிகைகள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். ஆனால், யாருக்கு என்ன கேரக்டர் என்பதை மட்டும் இதுவரை யாரும் சொல்லவில்லை.
 
“மிகப்பெரிய படத்தில் என் பங்கும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினி சாருடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை, எனக்குக்  கிடைத்த வரமாகத்தான் நான் பார்க்கிறேன். போட்டோஷூட்டில் அவரை முதன்முதலாகப் பார்த்தபோது, ரசிகையாக அவரை  ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தேன்” என்கிறார் சாக்‌ஷி அகர்வால்.