வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (15:46 IST)

சூர்யாவின் எஸ்3 -க்கு வழி விட்டு ஒதுங்கிய படங்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யாவின் எஸ் 3 படம் ஒரு வழியாக ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளது. ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் மாதம் 16ம் தேதி ரிலீஸாகும் என்றார்கள்.

 
 
அதன் பிறகு ரிலீஸ் தேதியை டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்கள். இந்நிலையில் தற்போது எஸ் 3 படம் நிச்சயமாக ஜனவரி மாதம் 26ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் ஜனவரி 26ம் தேதி ரிலீஸாகவிருந்த பரத் நடித்துள்ள கடுகு படம் தள்ளிப் போயுள்ளது. இது குறித்து கடுகு பட இயக்குனர் விஜய் மில்டன் கூறுகையில், என் முதல் படமான கோலி சோடா ஜனவரி 26ம் தேதி ரிலீஸானது. அதே போன்று குடியரசு தினத்தன்று கடுகு படத்தை ரிலீஸ் செய்ய நினைத்தேன். இந்நிலையில் எஸ்3 படம் ஜனவரி 26ம் தேதி வெளியாவதால் என் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளேன். எஸ் 3 வெளியாவதால் மோத விரும்பாமல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள மேலும் சில படங்களின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளது.