1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2016 (12:45 IST)

நயன்தாரா திருமணத்திற்கு நான் போவேன்: சிம்பு பளிச் பதில்!

நயன்தாரா திருமணத்திற்கு நான் போவேன்: சிம்பு பளிச் பதில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது திருமணத்திற்கு முன்னாள் காதலரும் நெருங்கிய நண்பருமான நடிகர் சிம்பு நிச்சயம் போவதாக கூறியுள்ளார்.


 
 
நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியிலும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் அச்சம் என்பது மடமையடா. இந்த படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் கௌதம் மேனன்.
 
வெற்றி குறித்து பேட்டியளித்த நடிகர் சிம்புவிடம், நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த திருமணத்திற்கு செல்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த நடிகர் சிம்பு, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் என் நெருங்கிய நண்பர்கள். அவர் அழைத்தால் நிச்சயம் திருமணத்திற்கு செல்வேன் என கூறினார்.