படுக்கைக்கு அழைத்த இயக்குனர் மற்றும் நடிகர்; அனிருத் இதற்கு உடந்தை: துணை நடிகை பரபரப்பு புகார்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (15:55 IST)
அனிருத் என்றவுடன் இசையமைப்பாளர் அனிருத் என நினைக்க வேண்டாம். மலையாள திரைத்துறையில் மீண்டும் ஓர் பாலியல் தொல்லை நடந்துள்ளது.

 
 
சமீபத்தில் பிரபல நடிகையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகினதால், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அந்த நிகழ்வின் சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் அடுத்த பாலியல் புகார் எழுந்துள்ளது.
 
ஹனி பீ படத்தை இயக்கியவர் இயக்குனர் ஜீன் பால். அந்த படத்தில் நடித்த துணை நடிகைக்கு சம்பளம் பாக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை திருப்பி தர அந்த நடிகை ஹோட்டலுக்கு அழைக்கப்பட்டார்.
 
அந்த ஹோட்டல் அறையில் படத்தின் இயக்குனர் ஜீன் பால், நடிகர் ஸ்ரீ நாத், டெக்னீசியன் அனூப் மற்றும் அனிருத் ஆகியோர் இருந்துள்ளனர்.
 
சம்பள பாக்கி வேண்டுமானால் எங்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என ஜீன் கூறியுள்ளார். சூழ்நிலையை உணர்ந்த நடிகை அங்கிருந்து தப்பி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இது மலையாள திரையுலகினருக்கு மீண்டும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :