Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராஜமெளலி கடவுளின் குழந்தை: சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து


sivalingam| Last Modified ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (22:20 IST)
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி உலகம் முழுவதும் சக்கை போட்டு வருகிறது. இந்த படம் இரண்டே நாட்களில் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ள நிலையில் இந்த படத்திற்கு திரையுலகினர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


 


இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் ராஜமெளலிக்கும், படக்குழுவினர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். பாகுபலி-2 திரைப்படம், இந்தியாவின் பெருமை. கடவுளின் குழந்தையான ராஜ மெளலிக்கும் அவரது அணியினருக்கும் எனது வாழ்த்துகள்.” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் வாழ்த்துக்கு பாகுபலி 2' படத்தின் வில்லன் ராணா நன்றி தெரிவித்துள்ளார்.,


இதில் மேலும் படிக்கவும் :