சூப்பர்கூல் டைரக்டர்... மகேஷ்பாபு பாராட்டிய அந்த இயக்குனர் யார்?

Sasikala| Last Modified திங்கள், 2 ஜனவரி 2017 (10:48 IST)
ஆந்திராவின் பிரின்ஸ் மகேஷ்பாபு... அவர் வாயிலிருந்து வார்த்தை வரவழைப்பதே சிரமம். பாராட்டு என்பது பரம கஷ்டம்.

 
இந்நிலையில் தமிழ்ப்பட இயக்குனர் ஒருவரை, மனதார பாராட்டியுள்ளார். அவர் வேறு யாருமில்லை, மகேஷ்பாபுவை  இயக்கிவரும் முருகதாஸ்தான்.
 
முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் மகேஷ்பாபு நடித்து வருகிறார். இதுபற்றி ட்விட்டரில்  குறிப்பிட்டிருப்பவர், சூப்பர்கூல் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு  நனவாகியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
முருகதாஸ் இயக்கும் படம், மகேஷ்பாபுவின் 23 -வது படம் என்பது முக்கியமானது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :