வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2016 (17:06 IST)

நடிகர் கன்னத்தில் பளார் விட்ட சன்னி லியோன் : பாலிவுட்டில் பரபரப்பு

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒரு நடிகரின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டதில், அந்த நடிகருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் மும்பை சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
பதறாதீர்கள்!.. இந்த சம்பவம் நடந்தது ஒரு சினிமா படப்பிடிப்பில். காட்சிப்படி சன்னிலியோன் தனது சக நடிகர் ரஜ்னீஷ் டுக்கலை கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும். 
 
சன்னியும் அவர் கன்னத்தில் அடித்தார். ஆனால் இயக்குனருக்கு ஏனோ முழு திருப்தி இல்லை. இதனால் சன்னி ஐந்து முறை அவரை கன்னத்தில் அடிக்க வேண்டியதாயிற்று. இருந்தும் இயக்குனருக்கு திருப்தி இல்லை. ஆறாவது முறை பளார் என, அந்த நடிகரின் கன்னத்தில் அடித்து இயக்குனரை திருப்தி படுத்தினார் சன்னி.
 
ஆனால் சன்னி அடித்த அடியில், நடிகரின் கன்னத்தில் காயமே ஏற்பட்டு விட்டது. அதைக் கண்டு கண் கலங்கிய சன்னி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அந்த நடிகரோ   பரவாயில்லை.. காட்சிக்காகத்தானே அடித்தீர்கள்’ என்று கூலாக கூறிவிட்டார்.
 
ம்.. அடிக்கிறது சன்னிலியோன் எனில் அடி வாங்கவும் ஆண்களுக்குப் பிடிக்கும் போலிருக்கிறது.