Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் சேதுபதி படத்தை வாங்கிய சன் டிவி

Vijay Sethupathi
CM| Last Modified வெள்ளி, 12 ஜனவரி 2018 (15:43 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘96’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி  வாங்கியுள்ளது.
சி.பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் படம் ‘96’. இந்தப் படத்தில் த்ரிஷா  ஹீரோயினாக நடிக்க, ஜனகராஜ், ‘ஆடுகளம்’ முருகதாஸ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் மேனன்  இசையமைக்கிறார்.
 
இந்தப் படம், 1996ஆம் ஆண்டில் நடப்பது போல எடுக்கப்பட்டு வருகிறது. கும்பகோணம், தஞ்சாவூர்  பகுதிகளில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் ஸ்கூல்  ஸ்டூடண்ட்ஸாகவும் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை, சன் டிவி வாங்கியுள்ளது. விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு  நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையையும் சன் டிவி தான்  வாங்கியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :