Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சுச்சி லீக்ஸ் ; தொடர்ந்து வெளியாகும் ஆபாச புகைப்படங்கள்


Murugan| Last Updated: செவ்வாய், 16 மே 2017 (10:56 IST)
தன்னுடைய பெயரில் பல டிவிட்டர் கணக்குகள் செயல்படுவதாகவும், அதில் ஆபாச படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது என பின்னணிப்பாடகி சுசித்ரா, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

 

 
கடந்த மாதம், சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து பிரபல சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தன்னுடைய டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு, அதில் புகைப்படங்கள் வெளியாகி வருவதாகவும், அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என சுசித்ரா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
அதே சமயம், அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரின் கணவர் கார்த்திக் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பின் சுசித்ரா தனது கணவர் கார்த்திக்குடன் அமெரிக்கா சென்றுவிட்டார். அதேசமயம், டிவிட்டரில் சுசித்ரா பெயரில் ஏராளமான கணக்குகள் செயல்பட்டு வருகிறது. அதில் சிலவற்றில் தொடர்ந்து ஆபாச புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. 


 

 
இந்நிலையில், சமீபத்தில் சென்னை திரும்பிய சுசித்ரா, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தனது பெயரில் 40க்கும் மேற்பட்ட போலி டிவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு, ஆபாச புகைப்படங்கள் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும், மேலும், தனது மின்னஞ்சல் முகவரிக்கும் அ அருவருக்கத்தக்க இமெயில்கள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே, இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :