வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 25 பிப்ரவரி 2015 (15:34 IST)

சொந்தமாக ஆடியோ நிறுவனம் தொடங்கிய ஸ்டுடியோ கிரீன்

சூர்யா, கார்த்தி நடிக்கும் படங்களின் லாபம் வெளியே சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிவகுமார் குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்டது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். இந்த நிறுவனம் தவிர்த்த வேறு நிறுவனங்களின் படங்களில் எப்போதாவதுதான் இருவரும் நடிக்கின்றனர்.
 

 
கார்த்தி நடித்துள்ள கொம்பன், சூர்யா நடித்துவரும் மாஸ் இரண்டுமே ஸ்டுடியோ கிரீன் தயாரிப்புதான். இதில் கொம்பன் மார்ச் 27 திரைக்கு வருகிறது.
 
கொம்பன் படத்தின் ஆடியோவை கிரீன் ஆடியோ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் வெளியிடுகின்றனர். இந்த விழா மார்ச் 5 நடக்கவுள்ளது. மாஸ் படத்தின் ஆடியோவையும் கிரீன் ஆடியோவே வெளியிடுகிறது.