வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 26 ஜனவரி 2015 (15:56 IST)

இளைஞர்களே மதுவை ஒழியுங்கள்.. கவிப்பேரரசு வைரமுத்து கோவையில் பேச்சு

வீ  கேர் நிறுவனத்தின் பதினைந்தாவது ஆண்டு விழா கோவை கொடிசியா அரங்கத்தில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து வாடிக்கையாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :-
 
தலைமுடி நம் பரம்பரையோடு சம்பந்தப்பட்டது. ஒரு தலைமுடியை வைத்து நம் சரித்திரத்தையே சொல்லமுடியும். அப்படிப்பட்ட தலைமுடிக்கு நாம் செய்யும் துரோகம் என்னவென்று தெரியுமா? குளித்துவிட்டு ஈரத்தலையோடு தலைவாரிக்கொள்வது. அதன் மூலம் வேர்கள் பாதிக்கப்படுகின்றன. நம் தலையில் இருந்து முடி உதிரத் தொடங்குகிறதா? நம் உடலில் எதோ நோய் இருக்கிறது என்று அர்த்தம். தலையை மின் உலர்த்தியைக் கொண்டு உலர்த்தாதீர்கள் அது முடிக்கு கேடு. இயற்கையாக வெயிலில் வைத்து உலர்த்துங்கள்.
 
எனக்கு தெரிந்த டாக்டர் ஒருவருக்கு திடீரென தோல் தடிமனாக ஆரம்பித்தது. காரணம் ஆறுமாதமாகியும் கண்டிபிடிக்க முடியவில்லை. இறுதியாக துப்பறிந்தார்கள் அவர் தினமும் நாற்பது வருடம் காலை ஆறு மணிக்கு காரில் உக்கார்ந்து வேலைக்கு செல்பவர் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்புபவர் என்று. காரிலும் ஏசி. அலுவலகத்திலும் ஏசி. அவருடைய தோலானது வெயிலையே பார்த்ததில்லை அதனால்தான் தோல் தடிக்கிறது எனக் கண்டுபிடித்தார்கள். தீர்வு அவர் ஒருமாத காலம் தினமும் வெயிலில் நின்று நோயைக் குணப்படுத்தினார். இயற்கையானதையே பயன்படுத்துங்கள்.
 
நான் தினமும் நான்கு கருவேப்பிலை இலைகளை கழுவி மென்றுவிட்டுத்தான் வெளியில் கிளம்புகிறேன். முருங்கைக்கீரை, துளசி இலை சாப்பிடுங்கள். இயற்கை முறைக்கு மாறுங்கள். தலைமுடி சரும நோய்களுக்கு மற்றொரு காரணம் குடி. அது எல்லா வகையான கெடுதல்களையும் கொண்டு வருகிறது. இளைஞர்களை சீரழிக்கிறது. வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் குடிப்பதை விட்டொழியுங்கள்.
 
- இவ்வாறு வைரமுத்து பேசினார்.