Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என் பொண்டாட்டி உங்களிடம் ஒண்ணே ஒண்ணு கேட்க சொன்னா! மணிரத்னத்திடம் சூர்யா

surya jothika" width="600" />
sivalingam| Last Updated: செவ்வாய், 21 மார்ச் 2017 (10:32 IST)
கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்த 'காற்று வெளியிடை' படத்தின் இசை வெளியீடு விழா இன்று சென்னையில் மிகச்சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் திடீர் விருந்தாளியாக சூர்யா கலந்து கொண்டார்.


 


அவர் இந்த விழாவில் பேசியபோது, 'இந்த படத்தில் கார்த்தி ஏற்றுள்ள கதாபாத்திரம் வித்தியாசமானது. இது கார்த்திக்கு கிடைத்த சிறந்த பரிசு. நான் எப்போதுமே ஒரு கேள்வியை மணிரத்னம் சாரிடம் கேட்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் அந்த அளவுக்கு எனக்கு தைரியம் இருந்தது கிடையாது. என் பொண்டாட்டி கூட அந்த கேள்வியை உங்களிடம் கேட்கச் சொல்லியிருக்கிறார். நான் இப்போதும் என் மனைவியை பொண்டாட்டி தான் என அழைக்கிறேன் சார்.

எப்படி இத்தனை ஆண்டுகள் ஆனாலும், அதே வேகமும், புத்துணர்வும் உங்கள் படத்தில் இருக்கிறது? இதில் ஏதேனும் ரகசியம் இருக்கிறதா?' என்று சூர்யா கேட்டதும் அரங்கமே அதிர்ந்தது.

சூர்யாவின் இந்த கேள்விகள் உண்மைதான் என்பது சிந்தித்து பார்த்தால் தெரியும். அந்த காலத்தின் ஜாம்பவான் இயக்குனர்களாகிய பாரதிராஜா, பாக்யராஜ், உள்பட பல இயக்குனர்கள் இப்போதைய இளைஞர்களின் டிரெண்டுக்கு மாற முடியாமல் சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகிவிட்டார்கள். ஆனால் மணிரத்னம் மட்டுமே இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற கதையை தேர்வு செய்து வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :