1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2016 (18:08 IST)

அடுத்த மாதம் தொடங்குகிறது மிஷ்கின், விஷால் இணையும் துப்பறிவாளன்

மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் விஷால் நடிப்பதாக செய்தி வெளியாகி பல மாதங்களாகிறது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே உள்ளது.


 
 
விஷால் தற்போது நடித்து வரும் கத்திச்சண்டை படம் இன்னும் சில தினங்களில் முடிவடைகிறது. அதையடுத்து அடுத்த மாதம் முதல் துப்பறிவாளனில் தொடர்ச்சியாக நடிக்க உள்ளார். ராகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
தயாரிப்பாளர்கள் சங்கத்தை விமர்சித்ததால் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிடில் கத்திச்சண்டை தவிர்த்த அவரது எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு இல்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆக, பிரச்சனையுடன்தான் துப்பறிவாளன் தொடங்குகிறது.