வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2016 (15:31 IST)

ரஜினி ரசிகையாக நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி

சதுரங்க வேட்டைக்குப் பிறகு நட்டி என்கிற நடராஜ் நாயகனாக நடித்துவரும் படம், எங்கிட்ட மோதாதே. இந்தப் படத்தில் பார்வதி நாயருடன், சஞ்சிதா ஷெட்டியும் நடித்து வருகிறார்.

 
1980 -களில் நடப்பது போல் இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. ரஜினி, கமல் ரசிகர்களுக்கிடையிலான மோதல்தான் படத்தின் மையம்.
 
இதில் நட்டியும், சஞ்சிதா ஷெட்டியும் ரஜினி ரசிகர்களாக வருகின்றனர். ராமு செல்லப்பா இயக்கியுள்ள இந்தப் படம் டிசம்பர் 2 திரைக்கு வருகிறது.