1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (15:13 IST)

ஸ்ரீதேவி புலி கபூர் - யாருப்பா இந்த புதிய நடிகை?

ஸ்ரீதேவி புலி கபூர். அது யார் புலி கபூர் என்று திகைக்க வேண்டாம். சமூக வலைத்தளத்தில் தனது பெயரான, ஸ்ரீதேவி போனி கபூரைத்தான் இப்படி புலி கபூராக மாற்றி வைத்துள்ளார், நடிகை ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி பல வருடங்களுக்குப் பிறகு நடித்திருக்கும் தமிழ்ப் படம், புலி. இந்தப் படத்தின் பிரமோஷன் உள்பட அனைத்து விஷயங்களிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அதன் உச்சமாக தனது பெயர், ஸ்ரீதேவி போனி கபூரையே ஸ்ரீதேவி புலி கபூர் என மாற்றி வைத்துள்ளார்.
 
ஸ்ரீதேவிக்கு ஏன் புலி மீது இந்த கொலவெறி பாசம்?
 
சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணனின் வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவியைத்தான் முதலில் அவர்கள் அணுகினர். அவர் கேட்ட சம்பளம் மற்றும் போட்ட கட்டளைகள் தாங்காது என்று அவருக்குப் பதில் ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்தனர். படம் வெளியாகி ரம்யா கிருஷ்ணனுக்கு நல்ல பெயர். கிட்டத்தட்ட வட போச்சே நிலை ஸ்ரீதேவிக்கு.
 
பாகுபலிக்கு போட்ட அத்தனை கட்டளைகளையும் புலி யூனிட் சிரமேற்கொண்டு செயல்படுத்தியது. அதனால் ஒரு தனிப்பாசம். மேலும், பாகுபலி ரம்யா கிருஷ்ணனைவிட புலி ஸ்ரீதேவிதான் சூப்பர் என்று சொல்ல வைக்க வேண்டும் என்றும் பிரயாசப்படுகிறார் ஸ்ரீதேவி. அதன் வெளிப்பாடுகள்தான் இப்படி புலி கபூராக வெளிப்பட்டுள்ளது.
 
ம்... பலியை புலி முந்துகிற மாதிரி இல்லையே மேடம்.