வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 27 மே 2017 (13:36 IST)

ஸ்ரீதேவிக்கு இப்படியொரு சிக்கலா?

பாகிஸ்தான் நாட்டால் நடிகை ஸ்ரீதேவிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.





ஸ்ரீதேவி நடிப்பில், த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது ‘மாம்’. இது, அவருக்கு 300வது படம். இந்தப் படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள் சாஜல் அலி, அட்னன் சித்திக் இருவரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜூலை 7ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தின் புரமோஷனில் பாகிஸ்தான் நடிகர்கள் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம், பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியப் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பே அவர்கள் இந்தப் படத்தில் நடித்துவிட்டாலும், புரமோஷனில் கலந்துகொள்ள முடியாத நிலை உண்டாகியுள்ளது. இத்தனைக்கும், ஸ்ரீதேவியின் வளர்ப்பு மகளாக, முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் சாஜல் அலி. அவர் இல்லாததால், தனியாகவே புரமோஷனில் கலந்துகொள்ள இருக்கிறார் ஸ்ரீதேவி.