Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘ஸ்பைடர்’ படத்தின் இரண்டாவது டீஸர் ரிலீஸ் தேதி

cauveri manickam| Last Modified திங்கள், 19 ஜூன் 2017 (14:47 IST)
மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படத்தின் இரண்டாவது டீஸர் ரிலீஸாகும் தேதி தெரியவந்துள்ளது.



 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீஸர், கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியானது. டீஸருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால், அடுத்த டீஸரை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9ஆம் தேதி இரண்டாவது டீஸர் ரிலீஸாக இருக்கிறது.

உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ள மகேஷ் பாபு, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதுதான் கதை. மகேஷ் பாபு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்க, வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். பரத், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படம், செப்டம்பர் மாத இறுதியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :