வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (23:18 IST)

மகேஷ்பாபுவின் பிறந்த நாளில் 'ஸ்பைடர்' டீசர்: அதிகாரபூர்வ தகவல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே பெண்டிங் உள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை ரொமானியாவில் இந்த பாடல் படமாக்கப்படவுள்ளது.



 
 
இந்த நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரொமானியாவில் இருந்து நாடு திரும்பு மகேஷ்பாபு அன்றைய தினம் தனது பிறந்த நாளை ரசிகர்கள் மற்றும் குடும்பத்த்தினர்களுடன் கொண்டாடுகிறார்.
 
மேலும் மகேஷ்பாபுவின் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக ஆகஸ்ட் 9ஆம் தேதி 'ஸ்பைடர்' படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. இந்த தகவலை ஏ.ஆர்..முருகதாஸ் அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளார்.
 
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வரும் இந்த படத்தில் மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.  ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.