15 மணி நேரத்தில் 5 மில்லியன்: 'ஸ்பைடர் டீசர் சாதனை


sivalingam| Last Modified புதன், 9 ஆகஸ்ட் 2017 (23:59 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள 'ஸ்பைடர்' படத்தின் டீசர் இன்று காலை வெளியாகிய நிலையில் இந்த டீசர் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சேர்த்து  வெறும் 15 நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்துள்ளது.


 
 
ஏ.ஆர்.முருகதாஸின் வழக்கமான அதிரடி ஆக்சன் படமாக உருவாகியிருக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசருக்கு கிடைத்துள்ள வரவேற்பை இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது.
 
15 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மகேஷ்பாபு தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துவிட்டார் என்றும் இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் அவருக்கு பெரும் அளவில் ரசிகர்களை பெற்றுத்தரும் என்றும் கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :