வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (17:42 IST)

அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் ரிலீஸாகும் ‘ஸ்பைடர்’

மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படம், அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது.


 

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி இருக்கிறது. இந்த மாத இறுதியில் ரிலீஸாகும் இந்தப் படம், அமெரிக்காவில் மட்டும் 400 இடங்களில் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு வெர்ஷன்களுமே அங்கு திரையிடப்பட இருக்கிறது. 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தெலுங்கு வெர்ஷனும், 160க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ் வெர்ஷனும் திரையிடப்பட உள்ளது.