செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 30 மே 2017 (12:47 IST)

சமூக வலைதளங்களில் பரவும் காலா படத்தில் ரஜினியின் முஸ்லிம் கெட்டப்!

பா.இரஞ்சித் இயக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் 164 -வது படம் காலா. இப்படத்தினை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தி நடிகை ஹுமா குரேஷி ஹீரோயினாகவும், இவர்களுடன் இந்தி நடிகர், நானா படேகர், இந்தி நடிகை அஞ்சலி பாட்டீல், ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

 
இப்படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை கதை என்று கூறப்பட்ட நிலையில், இதனை படக்குழு மறுத்திருந்தது. காலா' போஸ்டரில் ரஜினி அமர்ந்துள்ள ஜீப், தங்களுடைய நிறுவனத்தின் அருங்காட்சியகத்துக்கு வேண்டும் என்று மகேந்திரா  நிறுவனத்தின் செயல் தலைவர் தெரிவித்திருந்தார். அதற்கு பதலளித்துள்ள தனுஷ், ’படப்பிடிப்பு முடிந்ததும் ஜீப், உங்களை  வந்து சேரும்’ என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு மும்பையில் கடந்த வாரம் மே 28-ம் தேதி தொடங்கியது.

 
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ரஜினி முஸ்லிம் தொப்பி அணிந்து வருவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.