பிகினி உடையில் ஆன்மீக சீரியல் நடிகை: ரசிகர்கள் கண்டனம்!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 28 டிசம்பர் 2016 (18:13 IST)
பிகினி உடை அணிந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் டிவி நடிகை ஒருவர் பகிர்ந்ததற்கு காட்டமான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

 
 
சோனாரிகா படோரியா என்ற இந்தி நடிகை, திவான் கி தேவ் மகாதேவ் என்ற டிவி சீரியலில் பார்வதி தேவியாக நடித்து வருகிறார். இவர், சில தெலுங்கு சினிமாப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 
இந்நிலையில், படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து சோனாரிகா, பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்தார். அப்போது, கடற்கரை ஒன்றில், பிகினி உடையில் நின்றபடி கவர்ச்சியாக செல்ஃபி எடுத்தது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
 
இதை கண்ட ரசிகர்கள், ஒரு ஆன்மீக நடிகை எப்படி பிகினி உடையில் காட்சி தரலாம் என விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :