இளையராஜா பாடல்களை பாட இயலாது: எஸ்.பி. பால சுப்ரமணியன் அதிரடி!!


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 19 மார்ச் 2017 (12:49 IST)
தான் இசை அமைத்த பாடல்களை தனது அனுமதியில்லாமல் பாடக்கூடாது என்று இளையராஜாவிடம் இருந்து நோட்டீஸ் வந்திருப்பதாக பிரபல பாடகர் எஸ்.பி. பால சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

 
 
இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், இரண்டு நாட்களுக்கு முன்பு இளையராஜாவிடம் இருந்து தனக்கும், பாடகி சித்ரா மற்றும் தனது மகன் சரண் ஆகியோருக்கும் நோட்டீஸ் வந்திருக்கிறது. 
 
அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். அபராதத் தொகையும் சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. 
 
எனவே இனி வரும் கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாட இயலாது என்பதற்கான காரணத்தை ரசிகர்கள் அறிந்து கொள்வதற்காக இதைத் தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :