தனுஷூக்கு சவால்விட்ட செளந்தர்யா ரஜினிகாந்த்

Last Updated: சனி, 2 ஜூன் 2018 (19:11 IST)
கடந்த சில நாட்களாக பிட்னெஸ் சேலஞ்ச் என்ற பிட்னெஸ் சவால் பாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான திரையுலக பிரபலங்கள் எடுத்து வருகின்றனர். தங்கள் உடலை பிட்னெஸ் ஆக வைத்து கொள்ள அவர்கள் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அமீர்கான் முதல் பல பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் இந்த பிட்னெஸ் சேலஞ்சில் கலந்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது லேட்டஸ்டாக இதில் இணைந்திருப்பவர் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த்.

இவர் ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை எடுத்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தன்னை இந்த பிட்னெஸ் சேலஞ்சில் கலந்து கொள்ள செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள செளந்தர்யா, தனுஷ் மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகிய இருவருக்கும் தான் சேலஞ்ச் விடுப்பதாக கூறியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :