1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (11:11 IST)

ஆமாம்... ரஜினி சாருடன் நடிக்கிறேன் - சோனாக்ஷி சின்கா

சத்ருகன் சின்கா ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அப்படியிருக்க 64 வயதான ரஜினி 27 வயதேயாகும் நண்பரின் மகளுடன் இணைந்து நடிக்க மாட்டார் என சிலர் பேசி வந்தனர். சினிமாவில் ஜோடி சேர வயது ஒரு தடையல்ல, மாஸ்... அது இருக்க வேண்டும். எஸ், ரஜினியுடன் ஜோடியாக நடிப்பதை சோனாக்ஷி சின்காவே ஒப்புக் கொண்டுள்ளார்.
கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இந்தப் படமும் கோச்சடையான் போன்று தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தந்து தயாராகிறது. சாதாரண காட்சியிலும் ரஜினி நடிப்பது ரிஸ்க் என்பதால் தொழில்நுட்பத்தின் உதவியை நாட வேண்டியிருக்கிறது.
 
இந்தப் படத்தில் ரஜினிக்கு இரு ஜோடிகள். அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா. அனுஷ்கா நடிப்பது உறுதியான பின்பும் சோனாக்ஷி நடிக்கிறாரா இல்லையா என்பது தெரியாமலே இருந்தது. இந்நிலையில் ரஜினி படத்தில் நடிப்பதை சோனாக்ஷியே உறுதி செய்துள்ளார்.
 
இதுபற்றி கூறியிருப்பவர், கடைசியில் என்னுடைய தென்னிந்திய சினிமா பிரவேசம் நடக்கயிருக்கிறது. அவர் வேறு யாருமில்லை ஒன் அண்ட் ஒன்லி ரஜினி சார். ரொம்ப நல்ல கதை என ரஜினி படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
 
இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்கட்ட படப்பிடிப்பை மைசூரில் நடித்த உள்ளனர்.