கமலின் பாபநாசம் - சிவ கார்த்திகேயன், தனுஷ் போட்டியை சமாளிக்குமா?

Mahalakshmi| Last Modified புதன், 3 ஜூன் 2015 (13:07 IST)
என்ன இது இப்படியொரு தலைப்பு என்று ஆச்சரியப்பட வேண்டாம். கமலின் இன்றைய வியாபார நிலை ரொம்பவும் கவலைப்படுவதாகவே உள்ளது.
 
உத்தம வில்லன் சென்னையில் சிவ கார்த்திகேயனின் சுமார் படம் காக்கி சட்டையைவிட ஒன்றேகால் கோடி குறைவாகவே சம்பாதித்தது. அதேபோல் அனேகன். தமிழக அளவில் கோடிகளின் வித்தியாசம் இன்னும் அதிகம்.
ஜுலை 17 சிவ கார்த்திகேயனின் ரஜினி முருகன், தனுஷின் மாரி ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக கூறப்படுகிறது. அதே தேதியில் கமலின் பாபநாசமும் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.
 
இன்றைய நிலையில் சிவ கார்த்திகேயன், தனுஷ் என்ற யங்கர்ஸின் படங்கள் வெளியாகும் போது, கமல் படத்தை தள்ளிப்போடுவதே நல்லது. இல்லையெனில் அது தற்கொலை முடிவாகிவிடும். 
 
கமல் படங்களின் வியாபாரம் இப்படி ஆனதில் நமக்கும் வருத்தமே. ஆனால், யதார்த்தத்தை சொல்லாமல் இருக்க முடியாதே.


இதில் மேலும் படிக்கவும் :