வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 3 ஜூன் 2015 (12:13 IST)

மாசு படத்துக்கு ஏன் வரிச்சலுகை இல்லை? காரணத்தை போட்டுடைத்த சினேகன்

மாஸ் என்ற பெயரை மாசு என்று மாற்றியும் படத்துக்கு 30 சதவீத வரிச்சலுகை கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை படவிழாவில் பாடலாசிரியர் சினேகன் வெளியிட்டார்.
 
மாசு படத்தில், ஈழத்தமிழ் பேசுகிறவனா... உன்னை உதைக்க வேண்டும் என்று வசனம் வருகிறது. ஈழத்தமிழர்களை இழிவாக பேசுவதால் வரிச்சலுகை தரக்கூடாது என ஒரு உறுப்பினர் கடுமையாக எதிர்த்ததால்தான் வரிச் சலுகை தரப்படவில்லை. அந்த உறுப்பினர் பாராட்டப்பட வேண்டியவர் என்றார் சினேகன். 
 
இது எவ்வளவு மோசமான உதாரணம் என்பது சினேகனுக்குகூட தெரியவில்லை என்பதுதான் சோகம். 
 
உதாரணமாக 36 வயதினிலே படத்தில், உன்னைப் போல் உன் மகளும் வந்துவிடக் கூடாது, வசந்தியைப் போல் வசந்தியின் மகளும் இருக்கக் கூடாது என்று ரகுமான் வசனம் பேசுவார். தாயைப் போல பிள்ளை இருக்கக் கூடாது என்பது பெண்களுக்கு எதிரான கருத்துதான். ஆனால், அது எப்படி படத்தில் வருகிறது? அப்படி சொல்வது தவறு என்று நிரூபிப்பதுதானே 36 வயதினிலே படம்.
 
மாசு படத்திலும் ஈழத்தமிழ் பேசுகிறவனா... உன்னை உதைக்க வேண்டும் என்ற வசனமும், கருத்தும் தவறு என்றுதானே காட்டப்படுகிறது. வன்மத்தை காட்டாமல் அந்த வன்மம் தவறு, சரியல்ல என்று எப்படி காண்பிக்க முடியும்? அது சாத்தியமா?
 
சினேகன் மற்றும் சினேகன் குறிப்பிடும் தணிக்கைக்குழு உறுப்பினர் போன்ற மேம்போக்கு சிந்தனைவாதிகளால்தான் பிரச்சனைகளே உருவாகின்றன.