1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 6 மே 2019 (18:56 IST)

SK-16 படத்தின் தரமான அப்டேட் கொடுத்த சன் பிச்சர்ஸ்!

மிஸ்டர் லோக்கல் படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள சிவகார்த்திகேயன் எஸ்.கே.16 படத்தின் அப்டேட்டை சன் பிச்சர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 


 
கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். மெரினா படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களது கூட்டணியில் உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில், இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.


 
சிவகார்த்திகேயனின் 16வது படம் உருவாகவுள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடை பெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு டி. இமான் இசை அமைக்கவுள்ளார் என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.