ரஜினியாக நடிக்கும் சிவகார்த்திகேயன்?

Sasikala| Last Modified திங்கள், 13 மார்ச் 2017 (17:50 IST)
ஜெயம் ராஜா இயக்கத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், ரஜினி வேடத்தில் நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
 
 
ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘வேலைக்காரன்’. 1987ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான படத்தின் தலைப்பு இது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரத்தில்  மலையாள நடிகர் பஹத் பாசிலும் நடிக்கின்றனர். 
 
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல்படி,  காக்கிச்சட்டை அணிந்த மில் தொழிலாளியாக நடிக்கிறாராம். தொழிலாளிகளுக்கும், முதலாளிக்கும் நடக்கும் பிரச்னைதான்  கதையாம். இதுவும் ரஜினி நடித்த ‘மன்னன்’ படத்தின் கதைதான்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :