Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிவகார்த்திகேயனின் புதுப்படம் தொடங்கும் தேதி அறிவிப்பு


cauveri manickam| Last Modified சனி, 10 ஜூன் 2017 (14:16 IST)
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது எனத் தெரியவந்துள்ளது.

 

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியவில்லை. ஆனால், அதற்குள் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையைத் தூக்கிவிட்ட பொன்ராம், மூன்றாவது முறையாக இணையும் படம் இது.

இந்தப் படத்தின் ஷூட்டிங், வருகிற 16ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. வழக்கம்போல கிராமத்துக் கதையுடன் களம் இறங்குகிறார் பொன்ராம். இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்துவரும் சமந்தா, அந்தப் படத்தை முடித்தபிறகு இந்தப் படத்தில் கலந்து கொள்கிறார். இந்தப் படத்துக்காக, ஏற்கெனவே 3 பாடல்களை கம்போஸ் செய்துவிட்டார் டி.இமான் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :