சிவகார்த்திகேயன்-நயன்தாரா ஜோடி சேரும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியீடு

Last Updated: திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (13:15 IST)
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து, தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடிக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு இன்று மாலை வெளியிடுகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ்.எம் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து  வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது ராஜேஷ் இயக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் இந்த படத்திற்கு  ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு  உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :