செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (20:26 IST)

பரவை முனியம்மாவை சந்தித்து நலம் விசாரித்த சிவ கார்த்திகேயன்

நடிகை பரவை முனியம்மாவை மருத்துவமனையில் சென்று சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார், சிவ கார்த்திகேயன்.
 

 
நடிகை பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வருமானம் இல்லாமல் அவர் சிரமப்படுவதாகவும், மருந்துக்கும், சிகிச்சைக்குமே அவரிடம் பணமில்லை எனவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, நடிகர் விஷால், பரவை முனியம்மாவின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ள முன்வந்தார். மாதம் அவருக்கு ரூபாய் ஐயாயிரம் தருவதாகவும் கூறினார்.
 
அவரைத் தொடர்ந்து தனுஷும் பரவை முனியம்மாவுக்கு ஐந்து லட்ச ரூபாய் அளித்தார்.
 
பரவை முனியம்மா கடைசியா நடித்தது, சிவ கார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில். அவரை மரருத்துவமனையில் சென்று சந்தித்த சிவ கார்த்திகேயன் நலம் விசாரித்ததோடு, மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.