Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மெரினாவில் தான் சிவாஜி சிலை இருக்க வேண்டும் – மறுபடியும் மனுத்தாக்கல்

ஞாயிறு, 16 ஜூலை 2017 (17:11 IST)

Widgets Magazine

மெரினாவில் இருந்து சிவாஜி சிலையை அகற்றக் கூடாதென மறுபடியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 

 
‘நடிகர் திலகம்’ என்று கொண்டாடப்படும் சிவாஜி கணேசன் முழு உருவச்சிலை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் அது நிறுவப்பட்டது என்பதாலேயே, அந்தச் சிலையை அங்கிருந்து அகற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு முடிவெடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக வழக்கு தொடர்ந்தது.
 
‘சிலையை அகற்றி எங்கு வைப்பீர்கள்?’ என்று நீதிமன்றம் கேட்க, ‘அடையாறில் அமைக்கப்பட்டு வரும் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் வைக்க இருப்பதாக’ தமிழக அரசு பதிலளித்தது. எனவே, சிவாஜி கணேசன் சிலையை அகற்ற உத்தரவிட்டது நீதிமன்றம். தற்போது அகற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், ‘மெரினாவிலேயே சிவாஜி சிலை இருக்க வேண்டும்’ என மனுத் தாக்கல் செய்துள்ளார் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் சந்திரசேகரன்.
 
“50 ஆண்டுகளாக கலைச்சேவை செய்தவர் சிவாஜி கணேசன். 300 படங்களுக்கும் மேல நடித்து, பல விருதுகளைப் பெற்றவர். தலைவர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கு மெரினாவில் சிலை இருப்பதுபோல், சிவாஜி சிலையும் அங்குதான் இருக்க வேண்டும். மணிமண்டபத்துக்கு மாற்றக்கூடாது. இதுகுறித்து முதல்வரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை, வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பிக்பாஸிலிருந்து இன்று வெளியேறுகிறாரா வையாபுரி?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் வையாபுரி இன்று வெளியேறி விடுவார் என ...

news

பிக்பாஸ் சர்ச்சை - விஷால் ஸ்டேட்மெண்ட்டால் வெறுப்பான கமல்

‘கமலுக்குப் பின்னால் கலையுலகம் நிற்கும்’ என்று விஷால் சொன்னதைக் கேள்விப்பட்ட கமல், ...

news

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பரணி - எதற்கு தெரியுமா?

இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பரணி கலந்து கொள்கிறார் என்ற செய்தி ...

news

சினிமா ஆன்லைன் முன்பதிவு கட்டணம் ரத்து - அபிராமி ராமநாதன் அதிரடி

சினிமா பார்ப்பதற்கான ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை, அபிராமி ராமநாதன் ரத்து செய்துள்ளார்.

Widgets Magazine Widgets Magazine