அக்கா ஜூலி அவமானத்தை தாண்டி ஜெயிக்கும்: தம்பி ஜோவானா பேச்சு!

Sasikala| Last Modified புதன், 12 ஜூலை 2017 (13:20 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் அனைவரும் சினிமா பிரபலங்கள், ஆனால் ஜூலு மட்டும்தான்  சினிமா பிரபலம் இல்லை. இதனால் ஜூலியை சக போட்டியாளர்கள் ஓரங்கட்டி வருகிறார்கள் என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.

 
3 வாரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து ஜூலியை கிண்டல் செய்தும், தொடர்ந்து அவமானப்படுத்தியும்  வருகின்றனர். இதனை பார்க்கும்போது எங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை, மனதுக்கு வேதனையாக உள்ளது என ஜூலியின் தம்பி ஜோவானா தெரிவித்துள்ளார்.
 
ஜூலியின் தம்பி ஜோவானா கூறுகையில், எங்கள் சொந்த ஊர் ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள மேலக்காவனூர். அப்பா ஒரு ஆட்டோ டிரைவர். அக்கா பி.எஸ்.சி. நர்சிங் முடித்துவிட்டு தொலைக்காட்சி மூலமா பிரபலமாகனும் என்று ஆசைப்பட்டு, ஒரு  செய்தி தொலைக்காட்சியில் வேலை பார்த்தபோதுதான் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகிட்டாங்க. இதனை டிவியில் பார்த்த எங்கள் அப்பா ரொம்ப திட்டினார்.
 
ஆனால் இப்போ பிக் பாஸ் நிகழ்ச்சியில் எங்க அக்கா எல்லோரும் அவமானப்படுத்துவதை பார்த்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி எங்க அக்காதான் ஜெயிப்பார் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார் ஜூலியின் தம்பி  ஜோவானா.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :