1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (13:00 IST)

பாலா இயக்கத்தில் கதாநாயகியாக உருவெடுக்கும் பாடகி

இயக்குனர் பாலாவின் அடுத்தப் படைப்பு குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் தற்போது புதுமுகங்களை வைத்து படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 
 
பாலா தன் இயக்கத்தில் ஆர்யா, விஷால், அதர்வா, ராணா, அரவிந்த்சாமி என நட்சத்திர பட்டாளங்களை இணைக்க முயற்சி செய்தார். ஆனால் தற்போது புதுமுகங்களை வைத்து இயக்கவிருக்கும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் பாலா தீவிரம் காட்டி வருகிறார்.
 
இதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக விஜய் தொலைக்காட்சியின் 'ஏர்டெல் சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிரகதி குருபிரசாத் என்பவரை தனது படத்தில் கதாநாயகியாக பாலா அறிமுகம் செய்யவிருக்கிறார். 
 
இசையுலகில் தனது திறைமையை வெளிப்படுத்திய பிரகதி தற்போது நடிப்பிலும் களமிறங்கவிருக்கிறார். இப்படத்தில் 'சாட்டை' படத்தில் நடித்த யுவனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.