வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 3 ஜூன் 2015 (09:43 IST)

ரஜினி யாருக்கு படம் நடிக்கணும்? லாபத்தை யாருக்கு தரணும்? - சிங்காரவேலன் சொல்வாராம்

யார் இந்த சிங்காரவேலன். விநியோகஸ்தர் என்ற பெயரில் கட்ட பஞ்சாயத்து செய்யும் இந்த நபரை தமிழ் சினிமா ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறது? லிங்கா நஷ்டம் என்று இவர் நடத்திய போராட்டங்களும் சவடால்களும் தமிழ் சினிமா இதுவரை காணாத ஒலி மாசு என்றால் மிகையில்லை.
 
இன்று விநியோகஸ்தர்களின், திரையரங்கு உரிமையாளர்களின் கூட்டு கூட்டம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார் சிங்காரவேலன்.
ரஜினி உடனடியாக ஒரு படம் நடிக்க வேண்டும். அதில் வரும் லாபத்தில் 50 சதவீதத்தை லிங்காவில் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு தர வேண்டும். 25 சதவீதத்தை படம் தயாரிப்பவருக்கு தர வேண்டும். மீதி 25 சதவீதம் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு. 
 
இப்படியொரு கணக்குப் போட்டு ரஜினியை சந்தித்து அதனை மனுவாக தரப் போகிறாராம். ரஜினி யார் தயாரிப்பில் நடிக்க வேண்டும், அந்த லாபத்தை யாருக்கு தர வேண்டும் என்பதை தீர்மானிக்க சிங்காரவேலன் யார். வியாபாரம் என்றால் இரு தரப்புக்கும் லாபம், நஷ்டம் ஏற்படும். லாபம் வரும்போது சத்தமில்லாமல் அனுபவித்துவிட்டு நஷ்டமடையும்போது அதையும் நீங்கதான் தர வேண்டும் என்றால் அது என்ன மாதிரியான வியாபாரம்.
 
சிங்காரவேலன் போன்ற நபர்களை தமிழ் சினிமா துணிந்து இந்தத் துறையிலிருந்தே அகற்ற வேண்டும். அப்போதுதான் சினிமா வியாபாரம் சீரடையும்.