வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (12:12 IST)

அஜீத் பிறந்தநாளில் சிம்பு வெளியிடும் ட்ரெய்லர்

நீண்டநாள் தயாரிப்பில் இருந்த சிம்புவின் வாலு ஒருவழியாக மே 9 -ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். மே 1 தனது தலைவர் அஜீத்தின் பிறந்தநாளில் படத்தை வெளியிடத்தான் விரும்பினார் சிம்பு.
ஆனால், அன்று உத்தம வில்லன், வை ராஜா வை படங்கள் வெளியாவதால் வாலு படத்தை வெளியிட முடியவில்லை. அதற்காக மே1 -ஐ கொண்டாடாமல் இருக்க முடியாதே.
 
வாலு படத்தின் புதிய ட்ரெய்லரை மே 1 சிம்பு வெளியிடுகிறார். இது அஜீத் பிறந்தநாள் ஸ்பெஷல் ட்ரெய்லர். 
 
ம்.. தொண்டன் என்றால் சிம்பு மாதிரி இருக்க வேண்டும்.