வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2015 (10:57 IST)

சனிக்கிழமை திரைக்குவரும் சிம்புவின் வாலு

வாலு படம் இதோ வருகிறது அதோ வருகிறது என்று மூன்று நான்கு ரிலீஸ் தேதிகளை அறிவித்தனரே தவிர படம் எந்த தேதியிலும் வெளிவரவில்லை. கடைசியாக இப்போது புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
 

 
வேட்டை மன்னன் படத்தை நிறுத்திவிட்டுதான் வாலு படத்தை சிம்பு அறிவித்தார். இரண்டே மாசம் படப்பிடிப்பு நடத்தி மூன்றாவது மாசம் படம் ரிலீஸ் என பில்டப்பெல்லாம் பலமாக இருந்தது. ஆனால் வழக்கம்போல சிம்புவின் திருவிளையாடல்களால் படம் வருடக்கணக்கில் இழுத்து சமீபத்தில்தான் நிறைவடைந்தது.
 
தற்போது மே 9 சனிக்கிழமை படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். பொதுவாக வெள்ளிக்கிழமைதான் படங்கள் வெளியாகும். பண்டிகைகள் இருந்தால் விதிவிலக்காக வார தினங்களிலும் வெளியிடுவார்கள். அபூர்வமாக சனிக்கிழமை படத்தை வெளியிடுகின்றனர்.